Tuesday, 5 September 2017

முடி உதிர்தல்,பொடுகு, வளர்ச்சிக்கு:-

முடி உதிர்தல்,பொடுகு, வளர்ச்சிக்கு:-

1.   வல்லாரைச்சாறுடன் சமன் ந,எண்ணை கலந்து,காய்ச்சி,வடித்து தேய்த்து வர முடி அடர்த்தியாக வளரும்         
                                
2.   பொடுதலைஇலைகளை சீசாவிலிட்டு மூழ்குமளவு ந.எண்ணை சேர்த்து 21 நாள் சூரிய புடமிட்டு  வடிகட்டி தலைக்குத் தேய்த்துவர பொடுகு, முடிஉதிர்தல் கட்டுப்படும்       
                      
3.   கொட்டைகரந்தை இலைச்சாறு சமன் தே.எண்ணை கலந்து,காய்ச்சி, வடித்து, தேய்த்துவர முடி வளரும்.கருமையடையும்           
                        
4.   செம்பரத்தை பூச்சாறு சமன் தே.எண்ணை கலந்து காய்ச்சி,வடித்து தேய்த்து  வர தலைமுடி கருத்து அடர்த்தியாக வளரும்.     
                           
5.   செம்பரத்தைபூக்களை அரைத்து தேய்த்து ஊற வைத்துக் குளிக்க தலைப்பேன்கள் குறையும்.          
                                     
6.   சடாமஞ்சிலை தே.எண்ணையில் கலந்து,தடவிவர கூந்தல் வளரும்.

7.   அரைக்கீரை விதையை ந.எண்ணையில் காய்ச்சி வடித்து,தேய்த்துவர முடி கருத்து செழித்து வளரும்               
                                          
8.   நெல்லிக்காய் தைலம் தேய்த்து தலை முழுகிவர கண்கள் பிரகாசிக்கும். பொடுகு,முடிஉதிர்தல் கட்டுப்படும்.

No comments:

Post a Comment