உங்களது சேதனத்தின் படகு எங்கே கட்டப்பட்டிருக்கிறது....???
ஒரு கதை:
ஒரு பூர்ணிமை இரவு.....
நிலவின் ஒளியில் இரவு மிக ரம்யமாக இருந்தது.
சில நண்பர்கள் கூடி நதியில் படகோட்டிக் களித்தனர்.
படகில் ஏறு முன் நன்றாகக் குடித்தனர்.
பிறகு படகில் ஏறித் துடுப்பை வலித்துப் படகைச் செலுத்தலானார்கள்.
இரவு முழுவதும் செலுத்தினார்கள்.
பொழுது விடிந்தது.
குளிர்ந்த காற்று வீசியது.
அவர்கள் போதை குறைந்தது.
"நாம் எத்தனை தொலைவு வந்திருப்போம்,
இரவு முழுவதும் துடுப்பை வலித்தோமே" என்று யோசித்தனர்.
அவர்கள் கவனித்துப் பார்த்தபோது
இரவு எந்தப் படித்துறையிலிருந்து கிளம்பினார்களோ அங்கேயே இருப்பதை உணர்ந்தார்கள்.
துடுப்பு வலித்தது,
இரவு முழுவதும்....!!! ஓய்வின்றி ....!!!
ஆனால் படகை நதிக்கரையினின்று அவிழ்த்து விட மறந்து விட்டிருந்தனர் என்பதை அப்பொழுதுதான் உணர்ந்தனர்.
தனது படகைக் கரையினின்று அவிழ்த்து விடாதவர்கள்
முடிவற்ற பரம்பொருளின் சாகரத்தில் எத்தனை தவித்தாலும் கூக்குரலிட்டாலும் அவர்களுக்குக் கதி எதுவும் கிடையாது.
உங்களது சேதனத்தின் படகு எங்கே கட்டப்பட்டிருக்கிறது...???
உடலோடு கட்டப்பட்டிருக்கிறதா....???
எண்ணங்களோடு கட்டப்பட்டிருக்கிறதா....???
பாவத்தோடு கட்டப்பட்டிருக்கிறதா.....???
உங்கள் சேதனத்தின் படகு உடலோடு, மனத்தோடு, பாவத்தோடு கட்டப்பட்டிருந்தால்,
அது உங்கள் கரை.
நீங்கள் போதையில் எத்தனைதான் துடுப்பை வலித்தாலும்--
ஒரு ஜன்மமானாலும்,
பல கணக்கற்ற ஜன்மங்கள் ஆனாலும்,
எண்ணற்ற ஜன்மங்களுக்குப் பிறகும்,
ஒரு சத் விசாரத்தின் குளிர் காற்று வீசினால்,
சத் தரிசனத்தின் ஒளிக் கிரணங்கள் உங்களை அடித்து எழுப்பி விட்டால்,
நீங்கள் விழித்துப் பார்த்தால்,
அனந்த ஜன்மங்களில் துடுப்பு வலித்துக் கொண்டிருந்தது வீணே....!!!
எங்கே கிளம்ப நினைத்தீர்களோ,
அதே இடத்தில் படகு கட்டப்பட்டு இருப்பதை உணருவீர்கள்.
கரையிலேயே இருக்கிறோம்,
படகை அவிழ்த்து விட மறந்து விட்டோம் என்பது புலனாகும்.
படகை அவிழ்த்து விட மறந்து விடுகிறீர்கள்.
படகை அவிழ்க்கக் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.
துடுப்பு வலிப்பது மிகச் சுலபம்.
படகை அவிழ்த்து விடுவதை சிரமமான செயல்
சாதாரணமாகப் படகை அவிழ்த்து விடுவது சுலபமாகவும்,
துடுப்பை வலிப்பது சிரமமாகவும் தோன்றுகிறது.
வாழ்க்கையின் நதிப் பெருக்கில் நதியின் கரையினின்று படகை அவிழ்ப்பது மிகக் கடினம்.
துடுப்பை வலிப்பது சுலபம்.
படகை அவிழ்த்தால்---ராமகிருஷ்ணர் ஒரு முறை கூறினார்....
"நீ உனது படகை அவிழ்த்து விடு.
உனது பாய் மரத்தை விரித்து விடு.
இறைவனின் காற்று உன்னை அழைத்துச் செல்லும்.
துடுப்பை வலிக்கக்கூட வேண்டாம்....!!!"
அவர் கூறியது சரியே.
நாம் படகை அவிழ்த்து விட்டால்
இறைவனது அருள் காற்று வீசிக் கொண்டே இருக்கிறது.
அது நம்மை நடத்திச் செல்லும்.
தொலைவில் அடிவானத்தின் விளிம்பிற்கு அழைத்துச் செல்லும்.
அங்கே சென்றடையாமல் எவனும் ஆனந்தத்தை அடைவதில்லை.
ஆனால் படகை அவிழ்க்க வேண்டும்.
அந்தரங்க சாதனையில் நாம் படகை அவிழ்க்கிறோம்.
அன்றைய இரவில் அவர்களால் ஏன் படகை அவிழ்க்க இயலவில்லை...???
மயக்கத்தில் இருந்தனர்.
காலையில் குளிர்ந்த காற்று வீசி மயக்கம் தெளிந்தபோது படகு கட்டப்பட்டிருப்பதை உணர்ந்தனர்.
தீவிர கவனம், மேற்பார்வை என்று கூறினேன்.
தீவிர கவனம் மயக்கத்திற்கு எதிர்.
நாம் மயக்கத்தில் இருக்கிறோம்.
அதனால் படகைக் கட்டி வைத்திருக்கிறோம்.
உடலால், மனதால், பாவத்தினால்.....
தீவிர கவனத்தின் குளிர் காற்று வீசினால் நாம் விழிப்படைவோம்.
படகை அவிழ்த்து விடுவது சிரமமல்ல.
மயக்கமே படகைக் கட்டியுள்ளது.
தெளிவு படகை விடுவிக்கும்.
தெளிவிற்கான உபாயம்,
தீவிர மேற்பார்வை, சரியான அறிவு -- right awareness --எல்லாச் செயல்களிலும் இருப்பதே.
ஒரே ஒரு உள்முகச் சாதனைதான்.
சரியான சுய நினைவு,
சரியான எண்ணம்,
சரியான விவேகம்,
சரியான பிரக்ஞை.
மயக்கமற்ற நிலை.
இவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.
இதுவே உயர்வான மதிப்புள்ள சாதனை.
இதை இடைவிடாது பிரயோகம் செய்யுங்கள்.
நிரந்தரமாகப் பிரயோகம் செய்யுங்கள்.
No comments:
Post a Comment