கொள்ளு ரசம்(gram soup)
தேவையானவை :
கொள்ளு வேகவைத்த தண்ணீர் - 3 கப்
தக்காளி - 1 (பொடித்தது)
புளிக்கரைசல் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை
மல்லித்தளை
சின்ன வெங்காயம் - 1 (பொடித்தது)
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 3 பல்
கடுகு
பொடிக்க தேவையானவை :
சீரகம் - 1டேபிள்ஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 4
மல்லி - 1/2 டீஸ்பூன்
மேற்கண்ட கலவையை மிக்ஸ்சியில் நன்கு பொடிக்கவும்.
செய்முறை :
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.அதனுடன் புளிக்கரைசல் மற்றும் ரசப்பொடி , உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.பிறகு கொள்ளு வேக வைத்த தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.கடைசியாக மல்லித்தளை சேர்த்து இறக்கவும்.
No comments:
Post a Comment