Tuesday, 5 September 2017

பெண்களுக்கான மருத்துவம்...

பெண்களுக்கான மருத்துவம்

1. மிளகாய்பூண்டு இலைகளை அரைத்துப் பற்றிட இடுப்புவலி குணமாகும்

2. வெண்தாமரை மகரந்தங்களை நிழலிலுலர்த்தி,பாலில்கலந்து குடிக்க பெண் மலட்டுத்தண்மை  நீங்கும்

3. கரியபோளம்/சோற்றுக்கற்றாழைபிசினுடன், சம அளவு பொரித்த பெருங்காயம் கலந்து, பனங்கருப்பட்டி சேர்த்திடித்து, 5கிராம் தினமிருவேளை வெந்நீருடன் உண்டு வர வயதாகியும் பருவமடையாத பெண்கள் பருவமடைவர்.சூதகவலியும் தீரும்

4. பப்பாளிப்பழத்தை உண்டுவர கருப்பை சுத்தமடையும்

5. அசோகுப்பட்டைச்சாறுடன் தேன் கலந்து பருக அதிகரித்த மாதவிடாய், வெள்ளை கட்டுப்படும்.சூதகவலி குறையும்

6. முருங்கையிலைச்சாறு 30மிலி,தினம் 3வேளை பருக  மாதவிலக்கின்போது ஏற்படும்  வயிற்றுவலி,குத்தல்  குணமாகும்

7. கீழாநெல்லி வேர்களைஅரைத்து, கஞ்சியுடன் சேர்த்துப் பருக அதிகரித்த மாதவிலக்கு, இரத்தப்போக்கு நீங்கும்

No comments:

Post a Comment