Wednesday, 6 September 2017

சூப்பரான பன்னீர் ஸ்டஃப்டு குடைமிளகாய் செய்வது எப்படி...

*சூப்பரான பன்னீர் ஸ்டஃப்டு குடைமிளகாய் செய்வது எப்படி?*

*புலாவ், பிரியாணிக்கு குடை மிளகாயில் பன்னீரை ஸ்டஃப்டு செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.* *இன்று பன்னீர் ஸ்டஃப்டு குடைமிளகாய் செய்முறையை பார்க்கலாம்.*
*தேவையான பொருட்கள் :*
*குடைமிளகாய் - 6*
*ஸ்வீட்கார்ன் - 1 கப்,*
*உருளைக்கிழங்கு - 3*
*வெங்காயம் - 2,*
*பன்னீர் - அரை கப்,*
*மாங்காய் - சிறியது 1*
*மஞ்சள்தூள், இஞ்சி விழுது, மிளகு,* *சீரகத்தூள் - தலா ஒரு தேக்கரண்டி*
*சோயா சாஸ், தக்காளி* *சாஸ் - தலா* *2 தேக்கரண்டி*
*கார்ன்ஃப்ளார் - 2* *தேக்கரண்டி*
*உப்பு, எண்ணெய் -* *தேவையான அளவு*
*கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு*
*செய்முறை :*
*ஸ்வீட்கார்னை வேக வைத்து கொள்ளவும்.*
*உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.*
*கொத்தமல்லி, வெங்காயம், மாங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.*
*பன்னீரை துருவிக் கொள்ளவும்.*
*கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.*
*வெங்காயம் நற்காக வதங்கியதும் இதில் வேகவைத்த ஸ்வீட்கார்ன், மாங்காய், மசித்த உருளைக்கிழங்கு, பன்னீர் சேர்த்து வதக்கவும்.*
*அடுத்து அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகு, சீரகத்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.*
*இதை அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லித் தழை தூவி கலந்து வைக்கவும்.*
*குடைமிளகாயின் மேல் பகுதியை வெட்டி எடுத்து விடவும். உள்ளிருக்கும் விதைகளை சுரண்டி எடுத்து விட்டு, ஒவ்வொரு மிளகாயிலும் தயாரித்து வைத்திருக்கும் கலவையை நிரப்பவும்.*
*கார்ன்ஃப்ளார் மாவை சிறிது தண்ணீரில் கரைத்து கலவையாக்கி மிளகாய்களின் மேல் பகுதியை மூடவும்.*
*தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு ஸ்டஃப்டு குடைமிளகாய்களைப் பரவலாக வைத்து மூடி, 15 நிமிடம் வேக விடவும்.*
*ஆறியதும் இரண்டாக வெட்டி சாஸ் அல்லது மல்லி சட்னியை மேலே ஊற்றி சாப்பிடவும்.*
*சூப்பரான ஸ்டஃப்டு குடைமிளகாய் ரெடி.*

No comments:

Post a Comment