Tuesday, 5 September 2017

மகப்பேறு பெற, சூதகவலி, வயிற்றுவலி, கருப்பை இறக்கம்.

மகப்பேறு பெற, சூதகவலி, வயிற்றுவலி, கருப்பை இறக்கம்.

1.மலைவேம்பு இலைச்சாறு10மிலி மாதவிலக்கின் 3ம்நாள் காலை பருகி வர கருப்பைக்குற்றம் நீங்கி மகப்பேறு வாய்க்கும்.     
                  
2. கோங்கிலவம் பிசின் இளநீரில் 2கிராம் தினம்3வேளை கொள்ள பெரும்பாடு தீரும்.

3. வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து அருந்தி வர உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்.
122.வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வர மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.

4. ஒரு சாதிக்காயை எடுத்து,அதை பசு வெண்ணெயால் மூடி நீளமான ஊசியில் செருகிப் பிடித்துக்கொண்டு,நெருப்புச்சுடரில் காட்டி எரிக்க,வெண்ணெயை உள்வாங்கி சாதிக்காய் எரிய ஆரம்பிக்கும்.சாதிக்காய் முழுமையாக எரிந்து கருகும் வரை,மேலும், மேலும்,பசு வெண்ணெயை கொஞ்சம், கொஞ்சமாக அதன்மேல் வைத்துக் கொண்டே இருக்கவும்.இப்படி, .இறுதியாக மிஞ்சும் அந்த சாதிக்காயின் கரியை,நன்கு தூளாக்கி  ஒரு சிட்டிகை அளவு எடுத்து,காலை, மாலை இரு வேளையும் தேனில் உண்டுவர,நாற்பத்தெட்டு நாட்களில், இறங்கிய கர்ப்பப்பை மேலேறும். வருடக்கணக்கில் அவதிப்படுவோருக்கு, தொண்ணூறு நாட்களில் குணம் தெரியும்.

No comments:

Post a Comment