*நான்... நான்... நான்...*
*நான்* சம்பாதித்தேன்,
*நான்* காப்பாற்றினேன்,
*நான்* தான் வீடு கட்டினேன்,
*நான்* தான் உதவி செய்தேன்,
*நான்* உதவி செய்யலனா? அவர் என்ன ஆகுறது!!!!!
*நான்* பெரியவன்,
*நான்* தான் வேலை வாங்கி கொடுத்தேன்,
*நான் நான் நான் நான்* என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே!!!
*நான்* தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
*நான்* தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
*நான்* தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
*நான்* தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா??
*நான்* தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ?
*நான்* தான் காய்களை பழமாக மாற்றுகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ?
*நான்* தான் கடலில் மீன் பிடிக்கிறவனுடைய வலையில் மீனை சிக்க வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே *"நான்"* என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு..
ஆகையால் *நான்* என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் *அன்பாக* இருங்கள்.
*உலகைப்பற்றிக்கவலைப்படாதே ஏனெனில் அது இறைவனுக்குரியது.*
*உணவைப்பற்றி கவலைப்படாதே !அது இறைவனிடமிருந்தே கிடைக்கிறது.*
*எதிர்காலம் குறித்தும் கவலைப்படாதே! அதுவும் இறைவனின் கரத்தில் தான் உள்ளது*
*தாய் தந்தைக்கு..நல்ல பிள்ளை யாக,கணவனுக்கு நல்ல மனைவியாக,மனைவி க்கு நல்லகணவனாக,பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாக,வியாபார த்தில் நேர்மையாக...இதையெல்லாம் சரியான முறையில் செய்து... நம்மை படைத்த இறைவனை... எப்படி அடைவது என்பது பற்றி மட்டும்
சிந்தித்திரு.
No comments:
Post a Comment