Monday, 11 September 2017

பெற்றோரை நமஸ்கரிப்போம்...

"பெற்றோரை நமஸ்கரிப்போம்"

இந்த பூமியை விட பாரமானவள் தாய்.

ஆகாசத்தை விட உயர்ந்தவர் தந்தை.

ஒரு முறை தாய் தந்தையர்க்கு நமஸ்கரித்தால் பசுவை தானம் செய்த பலன் கிட்டும்.

ஸத்யம்_தாய்,
ஞானம்_தந்தை.

பத்து உபாத்யாயர்களை விட ஆசார்யர் சிறந்தவர்.

நூறு ஆசார்யர்களை விட தந்தை சிறந்தவர்.

தந்தையை விட ஆயிரம் மடங்கு சிறந்தவள் ஜென்மாவை_கொடுத்த_தாய்.

அவர்களுக்கு சேவை செய்தால் 6 முறை பூமண்டலத்தை ப்ரதக்ஷிணம் செய்த பலனும், 1000 முறை காசி யாத்திரை செய்த பலனும், 100 முறை ஸமுத்திர ஸ்நானம் செய்த பலனும் கிட்டும்.

எந்த மகன், மகள் மாத்ரு தேவதையை சந்தோஷமாக வைத்திருக்க மாட்டார்களோ, சேவை செய்ய மாட்டார்களோ அவர்களின் சரீர மாமிசம் நாய் மாமிசத்தை விட ஹீனமானது என்று வேதம் கூறுகிறது.

எப்பேற்பட்ட சாபத்திற்கும் விமோசனம் உண்டு.

பெற்ற_தாய்_கண்களிலிருந்து_கண்ணீரை வரவழைத்தால் அதற்குஒரு லட்சம் பசுக்களை தானம் செய்தாலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அஸ்வமேத யாகங்கள் செய்தாலும் போகாது.

தாயை விட சிறந்த தெய்வம்  இல்லை, காயத்ரியை மிஞ்சிய மந்திரம் இல்லை...

ஓம்_மாத்ரு_தேவோ_பவ.....
ஓம்_பித்ரு_தோவோ_பவ...

No comments:

Post a Comment