1. பிரண்டையை சூரணித்து எருக்கரசம் விட்டு வதக்கிக் கட்ட மொழி வீக்கம் தீரும்.
2. சங்கிலைச்சாறும் வெள்ளாட்டுப்பாலும் கலந்து கால்படி 3நாள் கொள்ள திமிர் நீங்கும்.
3. இலந்தையிலையை அரைத்து காடியில் கரைத்து மத்தால் கடைந்து வரும் நுரையை உடம்பில் பூச எரிவாத எரிச்சல் தீரும்.
4. 200 கிராம் இஞ்சியை தட்டி சாறுபிழிந்து முறித்து, அதில் 50கிராம் பூண்டைச் சிதைத்துப் பிழிந்து தினமிருவேளை 3நாள் கொடுக்க நெஞ்சில் குத்து, விலாக்குத்து தீரும்.
5. இருபதுவெள்ளைப்பூண்டை தோல்நீக்கி,தேங்காய்துருவலுக்குள் பொதிந்து பிட்டவித்து ,பூண்டையரைத்து வேளைக்கு கொட்டைப்பாக்களவு 8நாள் கொள்ள சகல குண்மம் வாயு நீங்கும்.
6. பரங்கிப்பட்டை250கிராம்,நிலாவாரை200கிராம்,சுக்கு150கிராம்,இடித்துதூள்செய்து வேளைக்கு20கிராம்தூளை 4ல்1ன்றாய் காய்ச்சி 16வேளை சாப்பிட வாதசூலை கைகால் முடக்கு வீக்கக்கடுப்பு உளைவு தீரும்
No comments:
Post a Comment