நீங்கள் பிறந்த கிழமையும் உங்கள் திறமையும்...!
பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் முக்கியம் ஆகும். இவை இரண்டும் எவ்வளவு முக்கியமோ அதேப்போன்று ஒருவர் பிறந்த கிழமையும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு குணங்கள் இருக்கின்றன. அந்த வகையில் நீங்கள் பிறந்த கிழமையை வைத்து உங்களின் குணநலன்கள் மற்றும் உங்களின் திறமைகளை அறிந்து கொள்ள முடியும். வாரத்தில் ஏழு நாட்கள் உள்ளன. ஏழு நாட்களுக்கும் ஏழு கிழமைகள் உள்ளன. எந்த கிழமையில் பிறந்தவர்கள் எந்த மாதிரியான திறமைகளைக் கொண்டிருப்பார்கள் என்று பார்ப்போம்.
ஞாயிறு :
ஞாயிற்று கிழமையில் பிறந்தவர்கள் எந்த ஒரு கடினமான வேலைகளையும் மிக எளிதாகவும், திறமையாகவும் செய்து முடித்து சாதனைப் படைப்பார்கள். இந்த கிழமையில் பிறந்தவர்கள் சொன்னதை செய்வார்கள். மிகவும் உணர்ச்சிமிக்கவர்கள். உதவும் குணம் கொண்டவர்கள். பிரகாசமான வாழ்க்கையைக் கொண்டவர்களாகவும், தன்னைச் சுற்றி இருப்போரை எப்போதும் சந்தோஷமாகவும் வைத்துக் கொள்வார்கள். இயலாது எனில் மௌனம் சாதிப்பார்கள். இவரது தலைமையின் கீழ் பலபேர் பணிபுரிவார்கள்.
திங்கள் :
திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் அனைவரும் விரும்பும்படியான அமைதியான மனம் படைத்தவர்களாகவும், உதவும் உள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். எதிரிகளை கூட நண்பர்களாகவே கருதுவார்கள். தர்மம், நியாயங்களைக் கடைபிடிப்பதில் உறுதி உள்ளவர்கள். நல்ல கற்பனைவளம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு சொந்தத் தொழில் கைக்கொடுக்கும்.
செவ்வாய் :
செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள் எதிலும் வெற்றியைக் காண்பவர்கள். இவர்கள் பலரிடமும் பலவிதமான யோசனைகளைக் கேட்பார்கள். ஆனாலும் தான் நினைப்பதே சரி என்கிற மனப்போக்கு கொண்டவர்கள். நல்லவர்களுக்கு நல்லவராகவும், கெட்டவர்களுக்கு கெட்டவராகவும் திகழ்வார்கள். அதனாலேயே பலருக்கும் இவரைப் பிடிக்காது. நியாயம் மற்றும் தர்மத்திற்குக் கட்டுப்பட்டவர்கள்.
புதன் :
புதன் கிழமையில் பிறந்தவர்கள் பல திறமைகளை தன்னுள் கொண்டவர்களாக விளங்குவார்கள். சிறந்த அறிவாளிகளாக இருப்பார்கள். இவர்களிடம் ஒரு ரகசியத்தைக் கூறினால், அதை வாழ்நாள் முழுவதும் காப்பார்கள். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். எதையும் எளிதில் புரிந்து கொண்டு வேலையை சிறப்பாக முடிப்பார்கள். பலதுறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள். எந்நேரமும் சாந்தமாக இருப்பார்கள்.
வியாழன் :
வியாழக்கிழமையில் பிறந்தவர்கள் மற்றவர்கள் போற்றத்தக்க குணங்களைக் கொண்டவர்களாக இருப்பர். எதையும் நேர்வழியில் செய்யக் கூடியவர்கள். குறுக்கு வழியில் செல்பவரையும் திருத்தி நல்வழிப்படுத்துவதற்கு பாடுபடுவார்கள். உற்றார், உறவினர்களுக்கு உதவிபுரியும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் முன்னேற்றம் அடைவார்கள்.
வெள்ளி :
வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் நல்ல பேச்சாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்கள் தன்னுடைய பேச்சுத் திறமையினால் மற்றவர்களை தன் வயப்படுத்தும் திறமை கொண்டவர்கள். கணவன் அல்லது மனைவியின் அளவற்ற அன்பிலும், பாசத்திலும் மூழ்கித் திளைப்பார்கள். இவர்கள் சொல்வதை கேட்காதவர்களை இவர்கள் புறக்கணித்து விடுவார்கள். எந்த வேலையையும் சிரமம் இல்லாமல் மற்றவர்களின் துணையுடன் பு ர்த்தி செய்வார்கள்.
சனி :
சனிக்கிழமையில் பிறந்தவர்கள் பொறுமைசாலிகள். தன்னம்பிக்கை மிக்கவர்கள். இவர்கள் ஒரு வேலையைத் தொடங்கினால், அந்த வேலையை முடித்தப் பிறகே அடுத்த வேலையைச் செய்யத் துவங்குவார்கள். இவர்கள் முழு பொறுப்பையும் ஏற்று நடத்துவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். சான்றோரிடமும், ஆன்றோரிடமும் மிகுந்த பக்தியுடன் நடந்து கொள்வார்கள். இவர்கள் எப்போதும் தான் உண்டு தன்வேலை உண்டு என இருப்பார்கள்.
No comments:
Post a Comment