Tuesday, 5 September 2017

துன்பங்கள் விலக.....

துன்பங்கள் விலக.....
சனிபகவான் பீடை விலக வழி :"பத்மபுராணம்   நூலில் இருந்து"

நாரதர் சிவபெருமானைப் பார்த்து பகவானே என்ன செய்தல் சனிபகவானால் உண்டாகும் துன்பங்கள் விலகும் , இதை தங்கள் வாயிலகாக் கேட்டறிய விரும்புகிறேன் .என்று கேட்டார் பரமேஸ்வரன் கூ றினார் .நாரதரே நான் சொல்லப் போகும் விஷயத்தைக் கவனமாக கேளுங்கள் .ஏனென்றால் பக்தியுடன் இதைக் கேட்பவர்கள் கூட துன்பங்களிலிருந்து விடுதலை பெறமுடியும் .சனிபகவான் சாதாரணமான தென்று எண்ணக் கூடாது .சகல கிரகங்களுக்கும் அரசனைப் போன்றனர் சனீஸ்வரன் .சூரியபகவானுடைய மகன் .கறுத்ததேகம்உடையவன்,அவனால் உண்டாகும் துன்பத்தைவென்றஅரசனுடைய கதையைக் கூ றுகிறேன் கேள் என்றார்..

ரகு குலத்தில் பிறந்த தசரதன் என்ற அரசன் மிகவும் பிரபலமானவன் .மகா பராக்கிரமசாலியான ஏழு கண்டங்களுக்கும் அதிபதி .அந்த மன்னன்  ஆண்டு வரும் காலத்தில் சனிபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் காலம் வந்தது .சனிபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் மிகக் கொடிய பஞ்சம் தோன்றி பனிரெண்டு ஆண்டுகள் வரையில் பூலோகத்தில் கொடிய துன்பத்தில் ஆழ்த்துவதாகும். அதை நினைத்து தேவர்கள் ,அசுரர்கள் எல்லோருமே பயந்து நடுங்குக் கொண்டிருந்தார்கள் .அதைப் பற்றி குல குருவான வசிஷ்டர் முதலான ரிஷிகளையும் தான் மந்திரிகளையும் கூட்டி பூலோகத்தில் துன்பம் நேராமல் தடுப்பதற்கு ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள் என்று கேட்டார் .அதற்கு வசிஷ்டர் இது பிரஜைகள் துன்பப்பட வேண்டிய காலம். இதைத் தடுப்பது  என்பது பிரம்மவாலும் முடியாத காரியம் என்று கூறினார்.

ஆனால் தசரதன் சும்மா இருக்கவில்லை .எப்படியாயுனும் பூலோகத்திற்கு சனிபகவானால் ஏற்படக் கூடிய துன்பம் நேராமல் பாதுகாக்க வேண்டும் என்று மனதில் உறுதி செய்து கொண்டவனாக வஜ்ஜிரக்கவச

No comments:

Post a Comment