Thursday, 7 September 2017

இயல்பாக வாழ்தல் ...

இயல்பாக வாழ்தல்

வேலை வெறி பிடித்த சமுதாயத்திற்கு,

' இயல்பாக வாழ்தல்' என்பது எதிரானது.

'இயல்பாக வாழ்தல் ' என்பது ,
புத்தியோடு வாழ்வது என்று பொருள்

அதன் பின்,

பணத்தின் பின்னால் வெறி பிடித்து அலையமாட்டாய்.

இடைவிடாமல் வேலை செய்யவும் மாட்டாய்.

தேவைக்கேற்ற அளவு மட்டுமே உழைப்பாய்.

உன் உலகாயதத் தேவைகளுக்கு உழைப்பாய்.

ஆனால், ஆன்மிகத் தேவை இருக்கிறதே....!!!

இயல்பாக வாழ்தல் ஆன்மிகத் தேவைக்கு அவசியம்.

ஆனால், பெரும்பான்மை மக்கள்,
ஆன்மிக வளர்ச்சியிலிருந்து, ஒதுக்கி வைக்கப்பட்டு புறக்கணிக்கப் பட்டு விட்டார்கள்.

இயல்பாக வாழ்தல் அழகான பிரதேசம்.

நீ இயல்பாக இருப்பாய்.

ஒன்றும் செய்ய மாட்டாய்.

அமைதியாக அமர்ந்திருப்பாய்.

புல் தானாக வளரும்.

நீ பறவைகளின் பாடல்களைக் கேட்டு மகிழ்வாய்.

மரங்களின் பசுமை, பல வண்ண மலர்கள் எல்லாவற்றையும் ரசிப்பாய்.

இயற்கையை ரசிக்க நீ எதுவுமே செய்ய வேண்டியது இல்லை.

எதையாவது செய்து கொண்டிருந்தால்,

அதை நிறுத்தி விட்டால் போதும்.

எந்த இறுக்கமும், கவலையும் இல்லாமல்,

கவனம் சிதறாமல் இருந்தால் போதும்.

இந்த அமைதி நிலையில்,

சுற்றிலும் நிகழும் சங்கீதத்தோடு ஓர் ஒத்திசைவு உனக்குள் பிறக்கும்.

சட்டெனக் கதிரவனின் அழகு புரியும்.

அந்தி மாலையின் அழகை அனுபவிக்காத பல இலட்சக்கணக்கான மக்கள் உண்டு.

கதிரவனின் உதயத்தையும் காணாதவர்கள் அவர்கள்.

அவர்களால் முடிவதில்லை.

அவர்கள் ஓயாமல் உழைத்து உற்பத்தி செய்து கொண்டிருப்பவர்கள்.

தங்களுக்காக அல்ல.

தந்திர எண்ணம் கொண்ட சுயநலமிகளுக்காக;

அதிகார பீடத்தில் இருப்பவர்களுக்காக;

மனித குலத்தைச் சுரண்டத்  தெரிந்தவர்களுக்காக.

அந்த வேலை மகத்தானது என்று அவர்களிடம் சொல்லி வைப்பார்கள் சொந்த நலனுக்காக.

காலப் போக்கில் உழைப்பவன்
எல்லாம் மறந்து போய்,

ஏன் ஓய்வெடுக்க முடியவில்லை என்பதும்
கூடத் தெரிந்து கொள்ள முடியாதபடி,
நிலைமை ஆழமாகிவிடும்

விடுமுறை நாள்களில் கூட எதையாவது செய்து
கொண்டிருக்க ஆரம்பித்து விடுவார்கள்.

விடுமுறையை அனுபவிக்க அவர்களால் முடிவதில்லை.

கடற்கரையில் அமர்ந்து நல்ல காற்று வாங்க முடிவதில்லை.

எந்த முட்டாள்தனத்தையும் அவர்கள் செய்யத் தயார்.

அனைவரும் இயல்பாக ஆனந்தமாக வாழ வேண்டும் என்பதே என் முயற்சி.

No comments:

Post a Comment